ரஷ்யா தொடர்பில் சீனாவின் தூதர் வெளியிட்ட முக்கிய தகவல்!
ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஜாங் ஜுன்(Zhang Jun) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யாவின் பொது வாக்கெடுப்பை கண்டிக்க அமெரிக்கா அழைப்பு விடுத்ததை அடுத்து, தனிமைப்படுத்தல் மற்றும் தடைகள் முட்டுச்சந்தைக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.
பிளாக் மோதல், அரசியல் தனிமைப்படுத்தல், பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தம் ஆகியவை முட்டுச்சந்திற்கு வழிவகுக்கும் என்று ஜாங் சபையில் கூறினார்.
அண்டை நாடான உக்ரைன் மீது மாஸ்கோ படையெடுத்ததில் இருந்து சீனா ரஷ்யாவிற்கு இராஜதந்திர ஆதரவை வழங்கியது.
மேலும் மோதலை முடிவுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட நியாயமான கவலைகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளுக்கான பெய்ஜிங்கின் அழைப்பை ஜாங்(Zhang Jun) மீண்டும் மீண்டும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.