விமான தயாரிப்பில் புதிய சாதனையை படைத்த சீனா
விமான தயாரிப்பில் புதிய சாதனையை சீனா படைத்துள்ளது.
சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானம் ஏ.ஜி.600 குவேன்லோங் 11ஆம் நாள் சீனப் பயணியர் விமானப் பணியகத்திலிருந்து தயாரிப்புக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.
இவ்விமானம் பெருமளவிலான தயாரிப்புக்கான கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளதை இது தெளிவுப்படுத்தியுள்ளது.
தற்போது, நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி தயாரிப்பு, உத்தரவாத சேவை அமைப்பு முறை ஆகியவற்றுக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைத் திறனைச் சீனா கொண்டுள்ளது.
சிறப்புப் பயன்பாட்டுக்கான பெரிய ரக விமானத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய முன்னேற்றத்தைச் சீனப் பயணியர் விமானத் தொழில் நனவாக்கியுள்ளது.