கோழைகளே ....ஐ.நா வில் நெதன்யாகு ஆவேச உரை; வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றியபோது ,பல நாட்டுப் பிரதிநிதிகள் கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதன்போது "நாங்கள் வெற்றி பெறுவோம், அதைத் தவிர வேறு வழியில்லை. அரங்கில் இருக்கும் எஞ்சிய நேர்மையற்ற கோழைகளும் விருப்பமிருந்தால் வெளியேறலாம்" என நெதன்யாகு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை குற்றச்சாட்டு
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த அவர், தற்காப்புக்காகவே போரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காலனித்துவக் குற்றச்சாட்டைச் சுமத்தும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்று பிரான்ஸ் ஆகிய நாடுகளை நோக்கி, "காலனித்துவம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்களே அவர்கள் தான்" என விமர்சித்துள்ளார்.
துருக்கி ஜனாதிபதி ரசெப் தாயிப் எர்டோகனை 'சர்வாதிகாரி' என விமர்சித்ததுடன், அவர் ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, அவர் பதவியேற்றது முதல் நியூயோர்க்கில் யூதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு வான்வழித் தாக்குதல்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் "துணிச்சலான தலைமைத்துவத்திற்கு" நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் உரைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அமெரிக்க நுழைவு இசைவு மறுக்கப்பட்டதால் காணொளி மூலம் உரையாற்றிய பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மேற்குக்கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகளின் சட்டவிரோத விரிவாக்கம் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தையும், இரு-நாடு தீர்வையும் முற்றாகப் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீதான கொலைகள், அழிவுகள் மற்றும் பட்டினிப் போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நெதன்யாகுவின் ஐ.நா வருகைக்கு எதிராக நியூயோர்க் நகரில் வீதிகளை மறித்துப் பாரிய போராட்டங்கள் நடைபெற்றன.
இப்போராட்டத்தில் பங்கேற்ற ஒஸ்கார் விருது பெற்ற பிரபல ஹொலிவூ நடிகை சூசன் சரண்டன், நடிகை ஹனா என்பிண்டர் மற்றும் நியூயோர்க் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.