நாளுக்கு நாள் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் எண்ணிக்கை வீழ்ச்சி!
ஹோர்முஸ் நீரிணையில் நேற்று (24) கப்பல்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய கப்பல் கண்காணிப்புத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாள் புதன்கிழமை 14 கப்பல்கள் பயணித்ததாகவும் அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நேற்று கப்பல்களின் எண்ணிக்கை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில கப்பல்கள் தங்கள் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்துவிட்டு நீர்வழிகளில் பயணிக்கக்கூடும், எனவே அவை இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த 10 நாட்களில் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை சராசரி சுமார் 18 ஆகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.