இளம் வீரருடன் நான்கு எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பும் சீனா
சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு ஆக இளம் வீரரையும் நான்கு ஆய்வு எலிகளையும் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியங்கோங் (Tiangong) விண்வெளி நிலையத்தில் மூன்று வீரர்கள் இருப்பர். 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவர். சீனாவின் விண்வெளித் திட்டத்தின் மணிமகுடம் அந்த நிலையம். அதில் பில்லியன்கணக்கான டாலரைச் சீனா முதலீடு செய்கிறது.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு நிகராக வரவேண்டும் என்பது இலக்கு ஆகும் . புதிய Shenzhou -21 எனும் விண்கலம் சீன நேரப்படி நாளை இரவு 11:45 மணிக்குப் புறப்படவிருக்கிறது. வூ ஃபெய் (Wu Fei) எனும் 32 வயது வீரர் அதை வழிநடத்தவிருக்கிறார்.
அவர் சீனாவின் ஆக இளைய விண்வெளி வீரர். அவருடன் மேலும் இருவர் செல்கின்ற நிலையில் இரு ஆண், இரு பெண் எலிகளும் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.