சீன விமான பயணி ஒருவரை வலைவீசித் தேடும் பிரபல நாடு: நாடுகடத்தவும் ஆணை
சீன பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் திடீரென்று மாயமாகியுள்ளதாக தென் கொரிய நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய சீன பயணியை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் கைது செய்யப்பட்டல் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் சியோலுக்கு அருகிலுள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் அருகாமையில் உள்ள ஹொட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தலுக்காக காத்திருக்கும் நிலையில் திடீரென்று மாயமாகியுள்ளார்.
அந்த நபர் அதிகாரிகள் வசம் சிக்கினால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஓராண்டு சிறை அல்லது 10 மில்லியன் won அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவர் நாடுகடத்தப்படுவார் எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு தென் கொரியாவிற்கு வர அவர் தடை விதிக்கப்படுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 2ம் திகதியில் இருந்து 2,189 சீன மக்கள் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் 590 பேர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் 136 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 281 சீன பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புடன் சீன பயணி ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் தென் கொரியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.