விண்வெளி குப்பையாக மாறியதால் 300 துண்டுகளாக வெடித்து சிதறிய சீன ராக்கெட்
சீன ராக்கெட் 300 துண்டுகளாக சிதறி விண்வெளி குப்பையாக மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய இணைய சேவைக்கான திட்டமான 18 Qianfan செயற்கைகோள் தொகுப்பை ஏவிய லாங் மார்ச் 6ஏ ராக்கெட் வெடித்து சிதறியதில் 300-க்கும் அதிகமான விண்வெளி குப்பைகள் உருவாகியுள்ளது என்று அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான (USSPACECOM) தெரிவித்துள்ளது.
தொகுப்பின் முதல் பகுதியான இந்த 18 செயற்கைக்கோள்களின் நோக்கம் சீனாவின் சொந்த பதிப்பான “எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்கை” நிறுவவதாகும். இது Qianfan பிராட்பேண்ட் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள Taiyuan செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 6ஏ ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள்கள் ஷாங்காயில் உள்ள Chinese Academy of Sciences' Innovation Academy for Microsatellites-யால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Long March 6A ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறி 300க்கும் மேற்பட்ட குப்பைகளாக மாறியுள்ள நிலையில், அவை பூமியின் சுற்றுப்பாதையில் இருப்பதை கண்காணிக்க முடியும் என்று USSPACECOM தெரிவித்துள்ளது.