80 ஆண்டுகளாய் கணவருக்காக காத்திருந்த மூதாட்டி மரணம்
சீனாவில் 80 ஆண்டுகளாய்க் கணவருக்காகக் காத்திருந்த 103 வயது மூதாட்டி (Du Huzhen) காலமான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி , சீனாவின் குய்சாவ் (Guizhou) மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக South China Morning Post செய்தி நிறுவனம் தெரிவித்தது.
1952ஆம் ஆண்டு கடைசி கடிதம்
உயிரிழந்த பெண்மணி 1940ஆம் ஆண்டில் திருமணம் முடிந்தபின் அவரது கணவர் ராணுவத்தில் சேர்ந்தார். 1943இல் தமது கணவருடன் சிறிதுகாலம் சேர்ந்து வசித்த காலத்தில் அவர் கர்ப்பமானார்.
மறு ஆண்டு அவர்களுக்கு மகன் பிறந்தபோது சிறிது நாள்களுக்கு மூதாட்டியின் கணவர் வீடு திரும்பினார். அதன் பின்னர் தாயின் இறுதிச்சடங்கினை முடித்துவிட்டு ராணுவத்திற்குத் திரும்பிய கணவரை அதன்பிறகு மூதாட்டி (Du Huzhen) சந்திக்கவே இல்லையாம்.
எனினும் இருவருக்கும் இடையில் கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்த நிலையில் 1952ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்குப் பிறகு கடிதம் வருவதும் நின்றதாக கூறப்படுகின்றது.
கணவரைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில் வெவ்வேறு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த மூதாட்டி (Du Huzhen), தமது இறுதிக்காலத்தில் கணவரின் நினைவில் முகத்தில் நிம்மதியுடன் அவரது உயிர் பிரிந்ததாக மூதாட்டியின் பேத்தி கூறினார்.