கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்றை திரையிடுவதை நிறுத்திய தியேட்டர் குழுமம்: பின்னணி
கனடாவில் பிரபல இந்திய நடிகர் நடித்த திரைப்படம் ஒன்று திரையிடப்பட்ட தியேட்டர்களைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவருவதால், அந்த திரையரங்குக் குழுமம், அந்தத் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது.
பிரபல இந்திய நடிகரான மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் என்னும் திரைப்படம் கனடாவில் சில தியேட்டர்களில் திரையிடப்பட்டுவந்தது.
இந்நிலையில், கடந்த வாரம், Richmond Hillஇல் அந்த திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்த தியேட்டர் ஊழியர் ஒருவர், தியேட்டரின் கண்ணாடி ஜன்னல்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பின்னர், அதே நாளில், அதே பகுதியிலுள்ள மற்றொரு தியேட்டரிலும், Scarborough மற்றும் பிராம்ப்டனிலுள்ள தியேட்டர்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது.
ஆக, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்கள் குறிவைக்கப்படுவது தெரியவந்ததால், Cineplex தியேட்டர் குழுமம், அந்த திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டது.
DISCHARGE FIREARM:
— Toronto Police Operations (@TPSOperations) January 24, 2024
Milner/Morningside
11:40 a.m.
- Reports that what appear to be bullet holes found in the window of a theater
- Unknown when this occurred
- Police are on scene
- Evidence of gunfire located
- No victims
- Anyone w/info contact police @TPS42Div#GO177753
^lb
இதேபோல, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் மர்ம நபர்கள் சிலர் பார்வையாளர்கள் மீது அடையாளம் தெரியாத ஒரு திரவத்தை தெளித்ததையடுத்து உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், 2022ஆம் ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட இருந்த தியேட்டர் ஒன்றிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு, சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் வெளியான தியேட்டர்கள் தாக்குதலுக்குள்ளாகின. இப்படி இந்திய திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிவரும் நிலையில், பொலிசார் தற்போது நிகழ்ந்துள்ள தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.