காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேருமாக 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார்.
மேலும் வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும்வரை தற்போது அங்கு கிருமி நீக்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.