கனடாவில் காலநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை!
கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான வெப்ப நிலையில் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சகல மாகாணங்களிலும், ஒரு பிராந்தியத்திலும் இவ்வாறு கூடுதல் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பிராந்தியங்களில் ஈரப்பதனின் அளவு வெப்பநிலை போன்ற காரணிகளினால் சுமார் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையை உணர நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ, கியூபெக் மாகாணங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் சாத்தியங்களும் உண்டு என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளிலும் கூடுதல் அளவிலான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.