ஒட்டாவாவில் பிரபல உணவகத்திற்கு மூடுவிழா!
கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள McDonalds உணவகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Rideau Street இருக்கும் McDonalds உணவகம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. இந்நிலையில் அதன் குத்தகையைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று கட்டட உரிமையாளர் Peter Crosthwaite குறிப்பிட்டுள்ளார்.
உணவகம் இவ்வாண்டு ஏப்ரலில் மூடப்படும். அதன் முன்னாள் மேலாளர் ஒருவர் அதனை ஆக மோசமான McDonalds உணவகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களிடையில் மூண்ட சண்டையில் ஒருவர், அவரது சட்டையிலிருந்து ரக்கூன் என்ற விலங்கை வெளியே இழுத்து அதனை இன்னொருவர் மீது வீசினார்.
McDonalds உணவகத்தில் மூண்ட சண்டைகளுக்காக 2018இல் மட்டும் 800 முறை பொலிஸாரின் உதவி நாடப்பட்டது. அதுமட்டுமல்லாது நாள்தோறும் 24 மணிநேரம் திறந்திருந்த அந்த உணவகம் சண்டைகளால் வேலைநேரத்தைக் குறைத்தது.
மேலும் ஒட்டாவா பொலிஸார் சென்ற ஆண்டு அந்த உணவகத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.