கனடாவின் முக்கிய நகரில் அவசர நிலை பிரகடனம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பெரி (Barrie) நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரி நகரின் மேயர் அலெக்ஸ் நட்டால் இந்த அவசரநிலையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நகரில் சட்டவிரோதமான முறையில் வீடற்றவர்களினால் அமைக்கப்படும் முகாம்களை அகற்றும் நோக்கில் இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் நெருக்கடி காரணமாக பரவிவரும் முகாம்கள் அகற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பெரி நகர குடிமக்கள் பொறுத்தது போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் உதவி தேடும் மக்களை ஆதரிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் பொது இடங்களில் முகாம்களை அனுமதிக்க முடியாது.
நகரத்தின் தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் முகாம்களை அகற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகாம்களினால் நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.