சுவிஸில் டெலிவரி செய்யப்பட்ட கண்டெய்னர்களில் கொகைன் பறிமுதல்
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் காபி தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட காபி கொட்டைகள் அடங்கிய கொள்கலன்களில் இருந்து 500 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஃப்ரீபர்க்கில் உள்ள பிரபல தொழிற்சாலைக்கு வந்த கண்டெய்னர்களில் மர்மமான வெள்ளைப் பொடி அடங்கிய கொள்கலன்கள் இருப்பதாக ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, மொத்தம் சுமார் ரூ.389 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியதில், அந்த மர்மப் பொடி கோகோயின்தான் என்பதை நிரூபித்துள்ளது.
இந்த கண்டெய்னர்கள் பிரேசிலில் இருந்து வந்தவை என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.