அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இடம்பிடித்த கோலா கரடிகள்
அவுஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் எண்ணிக்கை குறைந்ததால், அவை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ, அந்நாட்டின் வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கோலா கரடிகளின் எண்ணிக்கை, குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில், பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.
நியூ சவுத் வேல்ஸில், 2001ல் இருந்து கோலா கரடிகள் 33 சதவீதம் முதல் 61 சதவீதம் வரை காணாமல் போயுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் 2050க்குள் இந்த இனங்கள் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். காட்டுத்தீ, காடழிப்பு, வேட்டையாடுதல் மற்றும் வறட்சி உள்ளிட்ட காரணிகள் கோலா கரடிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாகும்.
விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் கோலா கரடிகள் சேர்க்கப்படும் என ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே அறிவித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான கோலா கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 கோடையில் காட்டுத் தீ காரணமாக 6400 கோலா கரடிகள் இறந்துள்ளன.
அழிந்து வரும் கோலா கரடிகளைப் பாதுகாக்க பாதுகாப்புக் குழுக்களை அமைக்கவும், சுரங்கத் திட்டங்களை நிறுத்தவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.