இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து; ஆறு பேர் வைத்திய சாலையில்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் தனியார் பஸ் வண்டியொன்றும் மோதி இன்று வியாழக்கிழமை (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தல - மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இடம்பெற்ற இந்த் விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொணராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி, பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
. இதன்போது மாறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பின்னால் வந்த தனியார் பஸ் வண்டி அதன் பின்புறத்தில் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.