இம்ரான்கான் தொடர்பில் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்த ஐ.நா.குழு
இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு பதிலளித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பது தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்.
எனவே, அவரை உடனடியாக விடுதலை செய்து நட்டஈடு வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் தன்னிச்சையான தடுப்புக்காவல் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏப்ரல் 2022 இல் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகள் குறித்து ஐ.நா கவலை கொண்டுள்ளது.
குழு தீவிர கவலைகளை எழுப்பியது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு பதிலளித்து, இது உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்துள்ளது.