உக்ரைன் போரால் இந்தியாவில் அதிகரிக்கவுள்ள ஐடி நிறுவனங்கள்
உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட ஐடி நிறுவனங்கள் இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் தொடர்ந்ததால், போர் அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உட்பட அனைத்து காரணிகளையும் பாதித்தது. இந்தப் போரினால் உக்ரைனின் ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐடி நிறுவனங்களும் போரினால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் போர் பதற்றம் இல்லாத நிலையில் தெற்காசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் தங்கள் நிறுவனத்தை கொண்டு செல்ல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.