ஒமிக்ரோன் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு..எங்கு தெரியுமா?
ஒமிக்ரோன் பரவல் காரணமாக சீனாவில் உள்ள பெய்ஸ் நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் பிற பகுதிகளுக்கு கொரோனா பரவுவதற்கு காரணமான சீனா, தொற்றுநோய்க்கு "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" அணுகுமுறையைக் கொண்டுள்ளது. குறிப்பாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகாரணமாக வைரஸ் பரவலை தடுக்க சீனா கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் தெற்கு நகரான பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் நோய் பரவல் அதிகரித்துள்ளது.
ஒமிக்ரோன் என்ற புதிய வகை கரோனாவின் தாக்கத்தால் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 1.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பைஸ் நகரில் 135 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு, வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது.