கமலா ஹாரிஸுக்கு கவலையை ஏற்படுத்திய தகவல்!
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹொப்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வம் நிலையில், இதுவரை 55 கோடியே 74 லட்சத்து 7 ஆயிரத்து 604 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி காரணமாக அந்நாட்டில் வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் , அமெரிக்காவில் நேற்று 25 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 901 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹொப்க்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் கமலா ஹாரிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள டக் எம்ஹொப் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.