கனடாவில் சளி காய்ச்சல் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் சளி காய்ச்சல் நோய் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் இந்த ஆண்டில் சளிக் –காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் சளிக் காய்ச்சல் நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 21 வீதமானவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 18 வீதமாக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
65 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அதிக அளவில் இருந்த சளி காய்ச்சல் நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு லட்சம் சனத்தொகையில் 2.4 பேர் வைத்தியசாலையில் வாராந்தம் அனுமதிக்கப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ பகுதியில் அதிகளவான சளி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.