கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி
கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
கனடாவில் தற்பொழுது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகின்றது.
இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கூட்டணி அமைத்திருந்த என்.டி.பி. கட்சி தனது ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கான்சர்வேட்டிவ் கட்சி லிபரல் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு மறைமுகமான வழியில் தொடர்ச்சியாக என்டிபி மற்றும் புளொக் கியூபிகோ கட்சிகள் ஆதரவினை வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக பியே பொலியேவ் தலைமையிலான கான்சர்வேட்டிவ் கட்சியினால் லிபரல் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.