சீக்கிய செயற்பாட்டாளரை கொல்ல சதி; முறியடித்த அமெரிக்க புலனாய்வு பிரிவு; இந்தியாவுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை, அமெரிக்க புலனாய்வு பிரிவினர் முறியடித்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டதாக பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனரா என்ற விபரம் தெரியவரவில்லை என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.