பெண்களைப் பார்த்து விசிலடிப்பேன் தவறாக தொடுவேன் என்று கூறி சிரித்த நபர்கள்... அவர்களை விமர்சித்த பெண் மீது வழக்கு
வலையொலி (podcast) வாயிலாக ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி ஒன்றில், பெண்களைக் குறித்து அவதூறாக பேசி சிரித்தவர்களைக் குறித்து ஒரு பெண் விமர்சித்தார். ரொரன்றோவை மையமாகக் கொண்டு, Manny Neves மற்றும் Jim Caruk என்பவர்கள் கட்டிட வேலை குறித்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறார்கள்.
அந்த நிகழ்ச்சி ஒன்றை மரவேலை நிறுவனம் ஒன்றை நடத்திவரும் Natasha Fritz என்ற பெண் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, இன்றைக்கு உலகம் ரொம்ப மாறிவிட்டது, எங்களுக்கு 20 வயது இருக்கும்போதெல்லாம், கவர்ச்சியான ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்றால், அவளைப் பார்த்து நாங்கள் விசிலடிப்போம், இப்போது அப்படியல்ல, அவர்களை நிமிர்ந்து பார்த்தாலே பொலிஸ் உங்கள் பின்னால் வந்து விடும், உங்கள் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்துவிடுவார்கள், இன்றைக்கு எல்லாம் இப்படி எடக்கு முடக்காகத்தான் நடக்கின்றன என்று கூறியுள்ளார் Danny.
ஆனால், நான் இன்று அப்படி ஒரு பெண்ணைப் பார்த்தாலும் விசிலடிக்கத்தான் செய்வேன் என்று கூறும் Caruk, ஆனால், அப்படி செய்யலாமா, நீங்கள் விசிலடிக்கத்தான் செய்வீர்களா என்று மற்றொருவர் கேட்க, ஆமாம் நான் விசிலடிக்கத்தான் செய்வேன் என்கிறார்.
Dannyயோ, நானென்றால், கையை நீட்டி அந்த பெண்ணின் உடல் பாகங்களை பிடிக்கக்கூட செய்வேன் என்று கூறுகிறார் அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த விடயத்தைக் கேட்டுக்கொண்டிருந்த Natasha, அவர்கள் பேசிய விடயத்தை எடிட் செய்து, நான் விசிலடிக்கத்தான் செய்வேன் என்னும் வாசகத்துடன் அதை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டார். ஆனால், அவர் எதிர்பாராத ஒரு விடயம் நடந்துள்ளது. அந்த ஆண்கள் பெண்களை மோசமான ரீதியில் வர்ணிக்க, அதைத்தான் விமர்சித்திருந்தார் Natasha.
ஆனால், பதிலுக்கு, Natasha வெளியிட்ட ஆடியோவால் தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவர் மீதே அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் Jim Carukம், Dannyயும்.
அத்துடன், Natasha தங்களுக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்!