சீனா கடற்பரப்பில் கொள்கலன் கப்பல் வெடிப்பு
உலகின் பரபரப்பான துறைமுகமாக கருதப்படும் சீனாவின் Zhejiang மாகாணத்தில் Ningbo-Zhoushan துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தைவான் நிறுவனத்திற்கு சொந்தமான லைபீரியக் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பினால் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களுக்கும் வெடிப்புச் சேதம் ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Aug 9: there’s a massive explosion on board Liberia-flagged container vessel YM Mobility docked at the Beilun port in Zhejiang’s Ningbo-Zhoushan Port at around 1:40 pm.
— Byron Wan (@Byron_Wan) August 9, 2024
YM Mobility is owned by Yang Ming Marine Transport Corporation. The ship was reportedly transporting hazardous… pic.twitter.com/FDyg5bgZOi