கனடாவில் இராணுவத் தளபதி பதவி உயர்வு தொடர்பில் எமுந்துள்ள சர்ச்சை!
கனடாவில் இராணுவத் தளபதி பதவி நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இதேவேளை கனடாவில் புதிய இராணுவத் தளபதியாக Lt.-Gen. Trevor Cadieu கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி Lt.-Gen. Trevor Cadieu பதவி ஏற்றுக்கொள்ளவிருந்தார். பின்னர் பாலியல் குற்றச் செயல் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் காரணமாக இந்த பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
முன்னாள் பெண் படைச்சிப்பாய் ஒருவர் புதிய இராணுவத் தளபதியாக Lt.-Gen. Trevor Cadieu க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்தே Lt.-Gen. Trevor Cadieu க்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.