ஆப்கனில் பெண் கல்விக்கான தடையை நியாயப்படுத்திய மதபோதகரால் சர்ச்சை
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அந்நாட்டு பெண்கள் கல்வி பயில தடை விதித்துள்ளதை, இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் நியாயப்படுத்தி பேசியருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த ஜாகிர் நாயக் என்பவர் முஸ்லிம் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். மேலும், இவர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் பீஸ் டிவி போன்ற அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்.

தொடர்ந்து இவர் சர்ச்சைக்குரிய வகையில் மதப் பிரசாரம் செய்து வந்ததைத் தொடர்ந்து,வெறுப்பு பேச்சுகளை பரப்பியது மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தேடப்படும் நபராக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டார்.
அதன் பின், இவர் மலேஷியாவுக்கு சென்று அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களின் கல்வி மீது விதித்துள்ள தடைகளை இவர் நியாயப்படுத்தி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிரின் இந்த வாதத்துக்கு எல்லைகளைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற ஆப்கன் பெண் கல்வி ஆர்வலரான மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய் கூறுகையில், ஜாகிர் நாயக்கின் இக்கருத்து பெருத்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது தலிபான்களின் பாலின ஒடுக்குமுறைக்கு மதசாயம் பூசுவாதாக அமைந்துள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.