மரணமடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளி இல்லை என அறிவிக்கப்பட்ட நபர்
சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர் குற்றவாளி இல்லை என தற்போது நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த பீற்றர் எல்லிஸ் என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் பகல் நேர சிறார் காப்பகத்தில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் பீற்றர் எல்லிஸ்.
தொடர்புடைய சம்பவம் குறித்த காப்பகத்தில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனையடுத்து 1993ல் முதன்முறையாக எல்லிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல சிறார்கள் விசாரிக்கப்பட்டனர்.
இதனையடுத்து 7 சிறார்கள் இவரால் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக கூறி 16 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து அவர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இருப்பினும் தாம் நிரபராதி என்றே கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு முக்கிய பங்காற்றிய Karen Zelas என்பவர் தவறிழைத்ததாக தற்போது நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து, எல்லிஸ் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீற்றர் எல்லிஸ் கடந்த 2019ல் புற்றுநோய் காரணமாக தமது 61ம் வயதில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.