ஹோட்டல் ஒன்றில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம்! 8 பேர் பரிதாபமாக பலி
கியூபாவின் ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் செயல்பட்டு வரும் சரடோகா என்ற ஹோட்டலில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹோட்டல் நேற்று காலை (06-05-2022) வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஹோட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தகவலறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு வைத்திய்சாலைகளில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
விசாரணையில், ஹோட்டலில் சமையல் எரிவாயு கசிந்ததால் இந்த விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது.