குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து; கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு
அண்மையில் தமிழகத்தின் குன்னூரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் திகதி தமிழகத்தின் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேவேளை விபத்துக்குளான ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.