சுவிஸில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றால் 2,607 பேர் பாதிக்கப்பட்டதோடு 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 81ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 277பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 37ஆயிரத்து 384 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 93 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,619 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8இலட்சத்து 32 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது.