பிரிட்டனில் கொரோனா அச்சமின்றி நடமாடும் மக்கள்! திங்கள் முதல் கடும் சட்டம்
பிரித்தானியாவில் தலைவிர்த்தாடும் கொரோனாவால் 80,500 பேர் இறந்துள்ள நிலையில். மக்கள் லாக் டவுனை மதிக்கவில்லை என்ற பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் கொரோனா அச்சமின்றி இன்று கூட மக்கள் கடும் குளிர்காலத்தில் கூட கடல் கரை சென்று, உடல் பயிற்ச்சி என்ற போர்வையில் நடமாடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனால் சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக், கடுமையாக சட்ட திட்டங்களை திங்கள் முதல் அறிமுகப்படுத்த உள்ளார்.
இதில் ஊரடங்கு சட்டத்தை கொண்டு வரலாம் என்றும். மக்களுக்கு ஒரு மணி நேரம் வெளியே செல்ல முடியும் என்று கட்டுப்பாடு போடலாம் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அனால் அதனை மட் ஹனக் நிராகரித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தை கொண்டு வர முடியாது என்றும். ஆனால் மிக கடுமையான லாக் டவுன் சட்ட திட்டங்களை தாம் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் இன்று செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.