ஜப்பான் - இந்தியா இடையே ஒப்பந்தம்
ஜப்பானும் இந்தியாவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.
ஜப்பானியப் பிரதமர் இஷிபா ஷிகெருவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலா, கல்வி மற்றும் தொழிலாளர் துறைகளில் தொழிலாளர்களைப் பரிமாறிக் கொள்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி நாளை(29) இந்திய – ஜப்பானிய பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சி போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை ஏற்படுத்துவதையும் இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.