போர்ச்சுகல் ஜனாதிபதிக்கும் கொரோனா; நிகழ்வுகளுக்கு தடை
போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதியாக மார்சிலோ ரெபெலோ டிசோசா இருந்து வருகிறார். வருகிற 24ந்தேதி அந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் 72 வயது பூர்த்தியான டிசோசா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.
அதன்பின்னர் நடந்த ஆன்டிபாடி பரிசோதனை முடிவிலும் பாதிப்பு இல்லை என முடிவானது. ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.
பரிசோதனையில் கொரோனா தொற்றால் டிசோசா பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்து ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.