சவுதியில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி; முதல் தடுப்பூசி பட்டத்து இளவரசருக்கு
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
சவுதியில், 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,52,815 பேர் குணமடைந்துள்ளதுடன் 6,168 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் பைசர் மற்றும் பயோஎன் டெக் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் ஒப்புதல் அளித்தது.
டிசம்பர் 16ம் தேதி சவுதி அரேபியா முதல் முறையாக பைசர் தடுப்பூசி டோஸ்களை பெற்றது. 1,00,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில், சவுதி சுகாதார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் பைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
#WATCH: #SaudiArabia’s Crown Prince Mohammed bin Salman receives his first dose of a #COVID19 vaccine on Friday. Read more here: https://t.co/wWANuP3Ks5 pic.twitter.com/AteUMxa9ul
— Arab News (@arabnews) December 25, 2020