சீனா, அமெரிக்கா நாடுகளில் வேகமெடுக்கும் தொற்று: 60 சதவீத மக்கள் பாதிக்கப்படலாம்
சீனா மற்றும் அமெரிக்கா உட்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சீனாவில் 60% மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2019 வூஹான் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு போன்று தற்போது சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் தற்போது கட்டுக்கடங்காமல் பரவுகிறது.
மட்டுமின்றி, கொரோனா பாதிப்பால் பலர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து வருகின்றனர். தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனைகளில் அதிகம் காணமுடிகிறது.
இதேநிலை நீடித்தால், சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் திகதி வரை 4 பேர் மட்டுமே கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மையில் அங்கு இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கொரோனாவால் மரணமடைந்தோர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.