இந்தியா முழுவதும் கொரோனா மாத்திரை விற்பனைக்கு!
இந்தியா முழுவதும் கொரோனா மாத்திரை விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும், கடந்த 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது.
இந்த மாத்திரையை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.