சீன துறைமுகத்தை மிரட்டும் கொரோனா: முழுவதுமாக முடக்கம்!

China Vaccination Wuhan CoronaVirus Port Of china
By Shankar Aug 12, 2021 10:38 PM GMT
Shankar

Shankar

Report

ஒரே ஒரு கொரோனா வைரஸ் கேஸ் காரணமாக சீனாவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்று மொத்தமாக மூடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாத நிலையில் திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பி உள்ளது.

2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியது. அதிகாரபூர்வமாக 2019 டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா பரவியது என்றாலும் கூட உண்மையில் கொரோனாவின் தோற்றம் எங்கிருந்து தொடங்கியது, எப்படி பரவல் ஆரம்பித்தது, பேஷண்ட் ஜீரோ யார், இதன் தோற்றம் இயக்கையானதா, செயற்கையானதா என்று யாருக்கும் இதுவரை தெரியாது.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த அமெரிக்கா பாதுகாப்பு துறையின் விசாரணையும் இன்னும் முடியவில்லை. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவில் சில மாதங்களிலேயே பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.மற்ற நாடுகளில் பரவல் ஏற்பட தொடங்கிய நிலையில் சீனாவில் 1 லட்சம் கேஸ்களை தொடுவதற்கு முன்பே பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

கொரோனா பரவல்

சீனாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 94,161 கேஸ்கள் மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்டுள்ளது. அதிலும் 1,836 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே தற்போது நிலவரப்படி சீனாவில் உள்ளது.

இந்த கேஸ்கள் கூட கடந்த ஒரு மாதமாக ஏற்பட்ட கேஸ்கள்தான். அதற்கு முன் சீனாவில் ஒரு மாதத்தில் மொத்தமாக 10 கேஸ்கள் வந்தால் கூட அது ஆச்சர்யம்தான். அந்த அளவிற்கு சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. 

வுஹான்

அதிலும் முதல் பரவல் தொடங்கிய வுஹான் நகரத்தில் கூட லாக்டவுன் திறக்கப்பட்டுவிட்டது. அங்கு வேக்சின் விநியோகமும் அதிகரித்துவிட்டதால் பல்வேறு பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

சீனாவில் கொரோனா காரணமாக இதுவரை ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கையே 4,636தான். அந்த அளவிற்கு அங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு, மொத்தமாக வைரஸ் பரவல் தடுக்கப்பட்டு உள்ளது. 

தடுப்பு

இந்த நிலையில்தான் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமான நிங்போ சுவாசான் துறைமுகம் மூடப்பட்டு உள்ளது. சீனாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் இது பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க வர்த்தக பணிகளை இந்த துறைமுகத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் கூட இங்கு 1.2 டன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டது.

மூடல்

ஆனால் இவ்வளவு பெரிய துறைமுகத்தை கொரோனா பரவலால் சீனா சீல் வைத்துள்ளது. அங்கு உள்ள ஒரே ஒரு ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தமாக துறைமுகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல லட்சம் கோடி அந்த நாட்டிற்கு இழப்பு ஏற்படும். ஆனாலும் கொரோனா பரவலை சீரியஸாக எடுத்துக்கொண்டு அந்த நாடு, துறைமுகத்திற்கு சீல் வைத்துள்ளது. அங்கு 2000க்கும் அதிகமான ஊழியர்கள் எல்லோருக்கும் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுவிட்டது.

வேக்சின்

கொரோனா பாதிக்கப்பட்ட இவருக்கும் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த துறைமுகத்தில் வேலை பார்த்த எல்லோரும் இப்போது மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஒரு வருடம் முழுக்கவே பெரிதாக எங்கும் லாக்டவுன் போடப்படவில்லை. 

ஆனால் லாக்டவுன்

பெரிய அளவில் எங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இந்தமுறை நிங்போ சுவாசான் துறைமுகத்தில் ஏற்பட்ட பாதிப்பை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சீனா லாக்டவுன் போட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் இடம் என்பதால் சீனா இதை சீரியஸாக அணுகுகிறதா அல்லது இதற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. என்ன இருந்தாலும் இத்தனை மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் கேஸ்கள் லேசாக உயர தொடங்கி உள்ளது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US