பிரான்ஸ் மக்களை அச்சுறுத்தும் கொரோனா!
பிரான்ஸில் நேற்றைய தினம் கொவிட் தொற்று காரணமாக 104 பேர் மரணித்துள்ளனர்.
முழுமையான தரவுகளை பொது சுகாதார பிரான்ஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய 10,591 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் பெரும்பான்மையான ஆய்வு கூடங்கள் மூடப்படுவதால் குறைந்த அளவு தொற்றுக்களே உறுதி செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் 20,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணிநேரத்தில் புதிதாக 530 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் 1,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 23 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 104 பேர் மரணித்துள்ளனர்.
இதுவரை பிரான்சில் கொவிட் 19 தொற்று காரணமாக 159,354 பேர் மரணித்துள்ளனர்.
இவர்களில் 129,981 பேர் முதியோர் காப்பகங்களில் மரணித்துள்ளனர்.