கொழும்பில் குறைவடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
கொழும்பு நகரில் கொரோனா தொற்றின் நாளாந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 350 என்ற சராசரி தொற்று எண்ணிக்கை தற்போது 110 ஆக குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது அணியினர் பொதுமக்களிடம் சென்று அவர்களை விரைவான என்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தும் ஒரு மூலோபாயத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அத்துடன் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சோதனைகள் நடத்த மக்கள் அதிகாரிகளிடம் வரும் நிலை இருந்தது எனினும் தற்போது அந்த மூலோபாயம் மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு -9 இல் உள்ள வேலுவனராம வீதியில் இருந்து நேற்று சுமார் 31 கொரோனா தொற்றாளிகள்; கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.