விவாகரத்தை தள்ளிப்போடும் கனடியர்கள்: ஏன் தெரியுமா

Canada
By Kamal Jun 12, 2026 01:30 PM GMT
Report

 சில கனடியர்களின் வாழ்க்கையில், திருமண உறவை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவு அவர்களின் உறவுச் சிக்கல்களைத் தாண்டி, அவர்களின் நிதி நிலைமையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

புதிய ஆய்வுத் தகவல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை தம்பதியினர் எப்போது பிரிவது என்பதைத் தீர்மானிக்கின்றன.

விவாகரத்தினால் ஏற்படும் நிதி இழப்புகளைச் சமாளிக்க முடியாததால், பலர் பிரியும் முடிவைத் தள்ளிப் போடுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

விவாகரத்தை தள்ளிப்போடும் கனடியர்கள்: ஏன் தெரியுமா | Cost Of Divorce Keeping Canadians In Unhappy

விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் கனடியர்களில் ஐந்தில் இரண்டு பேர் (37 சதவீதம்), விவாகரத்துக்கான சட்டரீதியான செலவுகள் காரணமாகவே தாங்கள் விரும்பியதை விட அதிக காலம் தங்களது திருமண உறவில் நீடிக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

வேலை ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதாரப் கவலைகள், தம்பதியினர் பிரிந்து செல்வதற்கான நேரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அதே அளவிலான (37%) மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உறவுகளுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகப் பணம் விளங்குவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. ஆய்வின்படி, 28 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது விவாகரத்து முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தற்போது கனடா மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் இந்த 'வாழ்க்கைச் செலவினம்' முதன்மையாக இருப்பதாக 'இப்சோஸ்' (Ipsos) நிறுவனத்தின் மற்றொரு தனிப்பட்ட கருத்துக்கணிப்பும் சுட்டிக்காட்டுகிறது.

தற்போது பல கனடியர்கள் திருமணத்தை உணர்வுப்பூர்வமான ஒன்றாகப் பார்ப்பதை விட, ஒரு நிதி சார்ந்த விஷயமாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

திருமணம் செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 47 சதவீதம், திருமணம் என்பது உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பை விட ஒரு பெரிய 'நிதி சார்ந்த அர்ப்பணிப்பு' என்று கூறியுள்ளனர்.

இந்தக் கருத்து இளைய தலைமுறையினரிடையே பரவலாகக் காணப்படுகிறது. மில்லினியல்களில் (Millennials) 56 சதவீதத்தினரும், ஜெனரேஷன் இசட் (Gen Z) பிரிவினரில் 54 சதவீதத்தினரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

திருமண வாழ்க்கையின் நிதி எதார்த்தங்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட கடினமாக இருப்பதாக 63 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், உணர்வுப்பூர்வமான அல்லது காதல் சார்ந்த விஷயங்களை கையாள்வதை விட, தம்பதியராக இணைந்து பணத்தை நிர்வகிப்பது மிகவும் சவாலானது என்று 48 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US