எலான் மஸ்க் அதிபாராக முடியுமா? அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பதில்!
அமெரிக்காவில் வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒரு நாள் அதிபராக முடியுமா? என்று டிரம்பிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு டிரம்ப், இல்லை, அது நடக்காது என்று பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார்.
அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டொலர்கள்வரை மஸ்க் பணத்தை கொடுத்துள்ளார்.
இதற்காக அவருக்கு அரசு செயல்திறன் தொடர்பான GOVERNMENT OF EFFICIENCY பதவி வழங்கப்பட்டுள்ளது.