மக்கள் துரித உணவுக்காக அதிகளவு பணம் செலவிடும் நாடுகள் எவை தெரியுமா?
உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் துரித உணவு நுகர்வு அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக உலகம் முழுவதும் துரித உணவு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. அந்தவகையில் உலகில் மக்கள் துரித உணவுக்கு அதிக பணம் செலவிடும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா
அந்தவகையில் உலகின் மிகப்பெரிய துரித உணவு சந்தையாக அமெரிக்கா உள்ளது எனவும், அந்நாட்டில் மொத்த ஆண்டு வருவாய் சுமார் $841.9 மில்லியனாகக் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து
இதற்கு அடுத்த படியாக $173.1 மில்லியன் வருவாயுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. பர்கர்கள் மற்றும் சாண்ட்விச்சுகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள உணவுகளாகும்.
பிரான்ஸ்
மேலும் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் $214.6 மில்லியன் ஆண்டு வருவாயுடன் பிரான்ஸ் உள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் பாரம்பரியம் சார்ந்த துரித உணவுகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதாகக் காணப்படுகின்றது.
மெக்சிகோ
இப்பட்டியலில் மெக்சிகோ $211.9 மில்லியன் வருவாயுடன் 4வது இடத்திலும் உள்ளது.
தென் கொரியா
தென் கொரியா $132.4 மில்லியன்வருவாயுடன் 7வது இடத்தில் உள்ளன.
சீனா
சீனா $176.9 மில்லியன் வருவாயுடன் 9வது இடத்தில் உள்ளது.
நோர்வே
மேலும் நோர்வே 10வது இடத்தில் உள்ளது.
இத்தாலி
இத்தாலி $195.2 மில்லியன் வருவாயுடன் 11வது இடத்தில் உள்ளன.
இந்தியா
அத்துடன் இந்தியா இப்பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஆண்டு துரித உணவு வருவாய் சுமார் $857.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இந்தியா இப்பட்டியலில் உலகளவில் 13வது இடத்தில் இருந்தாலும், நகரமயமாக்கல் மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக விரைவில் பட்டியலில் முன்னிலை வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.