இரட்டை சூரிய உதயம்; கனடாவில் நிகழவிருக்கும் அதிசயம்
வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் சனிக்கிழமை (மார்ச் 29) நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தின் போது ஒரு அரிய வான நிகழ்வை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம்
கடந்த ஏப்ரல் 8, 2024 அன்று ஏற்பட்டதை போல முழு சூரிய கிரகணம் இல்லாவிட்டாலும், இந்த சிறிய சூரிய கிரகணம் சூரியன் உதிக்கும் போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணத்தின் புள்ளி கனடாவின் கியூபெக்கின் நுனாவிக் பகுதியில் நிகழும் என்றும், அங்கு சூரிய உதயத்தின் போது கிரகணம் தோன்றுவதை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவிலும் இந்த நிகழ்வு சூரிய உதயத்தின் போது நிகழும். மேலும் நுனாவிக் முதல் கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் மைனே வரையிலான டெர்மினேட்டரில் உள்ள சில இடங்களில் கிரகணம் தோன்றுவதை காண முடியும் ஆகையால், இது ஒரு "இரட்டை சூரிய உதயம்" போல் தோன்றும் என்று கூறப்படுகிறது.
இதனால், சில இடங்களில் "சூரிய கொம்புகள்" (Solar Horns) என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும். வடகிழக்கு அமெரிக்க மாநிலங்களில், குறிப்பாக மைனே, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மாசசூசெட்ஸ் மற்றும் கிழக்கு கனடாவில், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கில் சிறிய கிரகணத்துடனான சூரிய உதயத்தைக் காணலாம்.