திருமணமாகாமல் 3 கோடி ஆண்கள் உள்ள நாடு!
பெண்களின் எண்ணிக்கை குறைவால் சீனாவில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் திருமணமாகாமல் 3 கோடி ஆண்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இருந்தாலும், பாலின இடைவெளி இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த பிரச்சினை விரைவில் சரியாவதற்கு வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனா வெளியிட்டுள்ள தகவல்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 113.5 ஆண்கள் இருப்பதாக தெரிகிறது. இதன் விளைவாக, திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதேவேளை சீனாவில் கடந்த ஆண்டு 1.2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 லட்சம் ஆண் குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டியபின் பெண் கிடைக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.