தடுப்பூசிக்காக தில்லு முல்லு காட்டிய வான்கூவர் பணக்கார தம்பதி: பாய்ந்த நடவடிக்கை

Arbin
Report this article
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள தில்லு முல்லு காட்டிய வான்கூவர் பணக்கார தம்பதி விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
வான்கூவர் பணக்கர தம்பதிகளான Rod மற்றும் Ekaterina Baker கனடாவின் யூகோன் பிரதேசத்திற்கு சென்று முறைகேடாக முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரியில் தனி விமானத்தில் சென்ற இந்த தம்பதி, அப்பகுதி நிர்வாகத்தால் அமுலில் கொண்டுவரப்பட்டிருந்த கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதியையும் மீறியுள்ளனர்.
இதனால் யூகோன் உள்ளூர் நிர்வாகத்தால் தலா 575 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்த, Rod Baker முக்கிய பொறுப்புகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
மட்டுமின்றி, தமது நடவடிக்கை தொடர்பில் மனிப்பு கோரவும் அவர் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தமக்கான வாய்ப்பு வரும் வரையில் காத்திருக்காமல், முறைகேடாக வேறு பிரதேசத்திற்கு சென்று தடுப்பூசி எடுத்துக் கொண்ட விவகாரம் நிரூபணமானால், 6 மாதங்கள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போது Baker தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஜூன் 15ம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் வரை தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கு பேக்கர் குடும்பம் தகுதி பெற மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியது.