விஷம் நிறைந்த கோள மீனால் உயிரிழந்த தம்பதி
கோலாலம்பூர் மலேசியாவில் விஷம் நிறைந்த கோள மீனை (Pufferfish) சாப்பிட்ட வயதான தம்பதி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து உள்ளூர் மீனவர்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
இறந்த தம்பதியரின் மகள், மற்றவர்கள் இந்த விஷ மீனை சாப்பிடுவதைத் தடுக்கும் சட்டத்தை வலுப்படுத்துமாறு மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
Ng Chuan Sing மற்றும் அவரது மனைவி Lim Siu Guan ஆகியோர் மார்ச் 25 அன்று ஒரு ஆன்லைன் விற்பனையாளரிடமிருந்து குறைந்தது இரண்டு பஃபர்ஃபிஷ்களையாவது வாங்கியதாகத் மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் மதிய உணவிற்கு மீன் வறுத்து உணவாக உண்டதோடு இதையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஃபர்ஃபிஷ் சாப்பிட்ட பிறகு மோசமடைந்த உடல் நிலை
இறந்த தம்பதியினரின் மகள் Ng Ai Lee இது குறித்து கூறுகையில் தனது பெற்றோர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே நாள் இரவு 7 மணிக்கு லிம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது இருப்பினும் அவரது கணவர் எட்டு நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.
ஒன்பதாம் நாளிலிருந்து அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.அவர் சனிக்கிழமை காலை இறந்தார்.
என்ஜி தனது பெற்றோரின் மரணத்திற்கு பொறுப்புக்கூறலையும், மலேசியாவில் வலுவான சட்டங்களையும் கோரினார். மலேசியாவில் குறைந்தது 30 வகையான பஃபர் மீன்கள் காணப்படுகின்றன.
Pufferfish நச்சு மீன்
பல மலேசிய சந்தைகளில் விஷம் நிறைந்த பஃபர்ஃபிஷ் விற்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மற்றும் கடலோர ஆய்வுகளுக்கான பல்கலைக்கழக சான்ஸ் மலேசியா மையத்தின் கடல் உயிரியலாளரும் இயக்குநருமான ஐலீன் டான் கூறுகையில் இந்த மீன் கவர்ச்சியானதாகக் கருதப்படுகிறது.
இது சுவையாக இருப்பதால் மிகவும் விரும்பப்படுகிறது. ஒருமுறை பஃபர்ஃபிஷ் சுத்தம் செய்யப்பட்டு துண்டுகளாக ஆக்கி விற்கப்பட்டால் அது எந்த வகை என அறிவது கடினம்.
பொதுமக்கள் தாங்கள் எந்த வகையான மீன்களை வாங்குகிறோம் என்பதை அறிந்து கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று டான் எச்சரித்தார்.
கோளமீன் என்பது ஒருவகை மீனினமாகும். இதன் உடல் குட்டையாகவும் தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது.
இதன் மேல்தகடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும் அரைக்கோள வடிவமாகவும் இருக்கும்.