சீனாவில் அதிகரித்து வரும் கொடிய நோயின் பாதிப்பு!
சீனா நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் (30-082-2022) 1,829 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,818 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 1,426 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.
மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,43,081 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.