கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்... கட்டுப்பாட்டை நீக்கும் நாடு
சிங்கப்பூரில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் சகஜமாக புழங்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாக கூறும் அமைச்சர் ஓங் யே குங், இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 500 பேர்களுக்கு மேல் திரளும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இது இரவு விடுதிகள், இரவில் செயல்படும் உணவு விடுதிகள் என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.