கனடாவில் ஐந்து உயிர்களை காவுகொண்ட கோர விபத்து
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மிடில்செக்ஸ் பகுதியில் இடம்பெற்ற கடுமையான வாகன விபத்தில் நான்கு மாணவிகளும் பள்ளிக்கூட பணியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
புருஷ் Bruce கவுன்டியில் உள்ள Walkerton District Community School (WDCS) பள்ளியின் மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
ஐந்து பேர் பலி
தோரொன்டேல் Thorndale ரோடு மற்றும் கோபல் ஹில்ஸ் Cobble Hills ரோடு சந்திக்கும் பகுதியில், தேமஸ் சென்டர் Thames Centre பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு SUV வாகனங்கள் மற்றும் ஒரு லொறியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முதல் SUVயில் இருந்த 33 வயது ஆண் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் உயிரிழந்தார்.
இதே வாகனத்தில் பயணித்த மற்ற மூன்று பேர் — இரு 17 வயது மாணவிகள் மற்றும் ஒரு 16 வயது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஐந்தாவது பயணியான 16 வயது மாணவி ஒருவர், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த ஐந்து பேரும் Walkerton District Community Schoolஐ சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது SUVயின் சாரதியும் பயணியும், மற்றும் லாரியின் சாரதியும் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.